செங்கடலில் பதற்ற நிலை – தவிக்கும் 16,000 கால்நடைகள்
செங்கடலில் பதற்ற நிலையால் 16,000 கால்நடைகள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படகின்றது.
ஆஸ்திரேலியாவில் இருந்து 14,000 செம்மறியாடுகளையும் 2,000 மாடுகளையும் ஏற்றிக்கொண்டு செங்கடலில் பயணம் செய்யவிருந்த கப்பலைத் திரும்பி வருமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட அந்தக் கப்பலை ஏமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சிக்காரர்கள் தாக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையடுத்து கப்பலில் உள்ள கால்நடைகளின் பாதுகாப்புக் கருதி அந்தக் கப்பல் திருப்பி விடப்பட்டுள்ளது.
கப்பலில் உள்ள கால்நடைகள் நலத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கால்நடைகள் சிரமப்படுவது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
மீண்டும் இஸ்ரேலுக்கு அனுப்புவதாக இருந்தால் அந்தக் கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றி ஒரு மாதம் கடந்த பின்னரே சென்றுசேர முடியும் என்று Reuters கூறுகிறது.
ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே முக்கியக் கடல்வழிப் பாதையாக அமைந்துள்ள செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் தாக்குதல்களால் வணிக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.