அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு பச்சைக் கொடி காட்டிய தெஹ்ரான்!
அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) இன்று உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில நாட்களாக ஈரான் ஒப்பந்தம் ஒன்றை எட்டாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெஷேஷ்கியன், எனது வெளியுறவு அமைச்சருக்கு நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தைகளைத் தொடர அறிவுறுத்தியுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் “நமது தேசிய நலன்களின் கட்டமைப்பிற்குள்” நடைபெறும் அதேவேளை நட்பு அரசாங்கங்களின்” கோரிக்கைகளைப் பின்பற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூத்த அதிகாரி ஒருவர், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்றும், “அமெரிக்காவுடனான தங்கள் உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்” என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




