மனித-யானை மோதலை தடுக்க தொழில்நுட்ப திட்டம் : பவித்ரா வன்னியாராச்சி
மனித-யானை மோதலைத் தணிப்பதில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் தெரிவித்துளளார் பவித்ரா வன்னியாராச்சி.
அதிதீவிர ஒளி நீரோட்டங்கள், சக்தி வாய்ந்த ஒலி அலைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களை எடுத்துக்காட்டி, அனுராதபுரம், புத்தளம், அம்பாறை போன்ற பிரதேசங்களில், மனித-யானை மோதல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
(Visited 2 times, 1 visits today)