லொஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு – 11 பேர் காயம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்ட CX880 என்ற ஜெட்லைனர் , தொழிநுட்ப கோளாறு காரணமாக ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திற்கே திரும்பியது.
இதன்போது அவசர கதவின் வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், பயணிகள் வெளியேறும்போது 11 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் செல்லும் விமானம் CX880, “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக புறப்படுவதை நிறுத்தி வாயிலுக்கு திரும்பியது.
விமானத்தில் 293 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் இருந்த நிலையில், ஐந்து எஸ்கேப் ஸ்லைடுகளைப் பயன்படுத்தி அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது எதிர்பாராத விதமாக 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)