கரூர் சம்பவம் – விஜய் சேதுபதி பட தலைப்பு மற்றும் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு
பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் ஒரு பான்-இந்திய படத்தை உருவாக்கி வருகிறார்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்க இருந்தது.
எனினும், கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த தலைப்பு மற்றும் டீசர் வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.






