பெண்களின் உடல் குறித்து தமன்னா கூறிய அந்த தகவல்…
மில்க் பியூட்டி தமன்னாவை சுற்றி தற்போது பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் அவர் இளமையாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பதற்கு ஒரு புதிய காரணத்தை கண்டுபிடித்து கூறுகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
அதே போல் ஒரு சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். எல்லாம் முடிய கடந்த 2 வருடமாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் தான் இருவரும் தங்களின் காதலை முறித்து கொண்டனர். இதற்கான காரணத்தை இருவருமே தற்போது வரை வெளிப்படையாக கூறவில்லை.
விஜய் வர்மாவுடனான பிரேக்கப்புக்கு பின்னர் தன்னுடைய உடல் எடையை குறைத்தார். இவர் சில ஊசி போட்டு கொண்டு தான் ஸ்லிம்மாக மாறினார் என ஒரு சர்ச்சை பரவியது.
இதற்க்கு தமன்னாவே விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். “என்னை பொறுத்தவரை சினிமாவில் அறிமுகமாகும் போது நான் எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன் என உணர்கிறேன். நான் எந்த ஊசியும் எடையை குறைப்பதற்காக போட்டுக்கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. பொதுவாகவே பெண்களின் உடல் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் தன்மை கொண்டது. எனக்கும் அப்படித்தான். ஒரே மாதிரியாக இருக்காது. என்னை பொருத்தமட்டில் எனது உடலில் புதிதாக எதுவும் மாற்றம் தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.






