தைவானின் எதிர்காலம் சீனாவை பொறுத்தது – அந்தர்பல்டி அடித்த ட்ரம்ப்!
தைவானின் எதிர்காலம் சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங்கைப் பொறுத்தது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸிடம் அளித்த பேட்டியில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனத் தலைவர் ஜி ஜின்பிங் (Xi Jinping) இராணுவ நடவடிக்கை மூலம் சுயராஜ்ய தீவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்தால், தான் “மிகவும் மகிழ்ச்சியடைய மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரோவின் அரசாங்கம் அமெரிக்காவிற்கு செய்ததாகக் கூறிய அதே வகையான அச்சுறுத்தலை தைவான் சீனாவிற்கு ஏற்படுத்தாததால், சூழ்நிலைகளை ஒத்ததாகக் கருதவில்லை என்றும் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.
வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்போடு ஒப்பிட்டு பார்க்கும்போது ட்ரம்பின் தற்போதைய கருத்தானது பெய்ஜிங்குடன் இணங்குவது போல் தெரிகிறது.





