கடற்படைக் கப்பலும் சீன இழுவைப் படகொன்றும் மோதிய குற்றச்சாட்டை மறுக்கும் தைவான்

சர்ச்சைக்குரிய தைவான் ஜலசந்தியில் தைவான் கடற்படைக் கப்பலும் சீன இழுவைப் படகொன்றும் மோதியது குறித்த சீனாவின் புகார்களை தைவானின் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துள்ளார்.
மேலும், தைபே, அந்த கடல்சார் மண்டலத்தில் தேவைக்கேற்ப, அழுத்தங்களுக்கு ஆளாகாமல், தொடர்ந்து இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் தைவானின் தீய கொள்கைகளை வெளிப்படுத்துவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தைவான் கூறுகிறது.
“சீனாவின் தைவான் விவகார அலுவலகம் எப்போதும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்கிறது. “நாங்கள் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளை மட்டுமே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று மட்டுமே நான் சொல்ல முடியும்,” என்று தைவான் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ நாடாளுமன்றத்திற்கு அருகில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சீன மீன்பிடிக் கப்பல் தைவானின் கடற்படை நடவடிக்கைகளை உளவு பார்க்கிறதா என்று கேட்டபோது, வெலிங்டன் கூ, அத்தகைய கப்பலால் இராணுவம் என்ன செய்கிறது என்பது பற்றிய விரிவான தகவல்களைப் பெறுவது சாத்தியமில்லை என்று கூறினார்.
என்ன நடந்தது என்பது குறித்து தைவான் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.