இந்தியா தமிழ்நாடு

கமலின் கம்பீர உரையை கொண்டாடும் தமிழர்கள்: திண்டாடும் பா.ஜ.க.!

  • February 6, 2026
  • 0 Comments

தமிழ் மொழியின் மேன்மை தொடர்பில் மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய உரை உலக வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூகவலைத்தளங்களில் உள்ள தமிழர்கள் கமலின் உரையை பதிவுகள்மூலம் கொண்டாடிவருகின்றனர். தமிழ் மொழி யாசகம் பெறுவதற்குகூட உதவாது என புலவர் ஒருவர் கூறினார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே கமல்ஹாசன் காத்திரமானதொரு உரையை நிகழ்த்தினார். இந்நிலையில் பா.ஜ.க. அரசியல் பிரமுகர்கள் சிலர் கமலின் உரையை […]

இந்தியா

மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு!

  • February 5, 2026
  • 0 Comments

மணிப்பூரில் Manipur குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் Yumnam Khemchand பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். குகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். மேலும், பா.ஜ.க-வின் கோவிந்தாஸ் கொந்தவுஜம், என்.பி.பி கட்சியின் கே. லோகன் சிங் […]

இந்தியா

பா.ஜ.க.– சிவ சேனா கூட்டணி வசமாகிறது மும்பை மாநகராட்சி!

  • January 16, 2026
  • 0 Comments

முப்பை மாநகராட்சியை பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் சாத்தியம் உருவாகியுள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் பா.ஜ.க. – சிவ சேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (15) நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரையிலான நிலைவரப்படி, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 2 ஆயிரத்து 869 தொகுதிகளில் பாஜக-சிவ […]

error: Content is protected !!