அரசியல் இலங்கை செய்தி

அரசின் ஆயுள் மக்கள் கைகளுக்குள்: கோட்டா ஆட்சியை உதாரணம் காட்டுகிறார் ராஜித!

  • January 5, 2026
  • 0 Comments

“ஆட்சியைக் கவிழ்ப்பது மக்களின் பணி, அதனை நாம் செய்யமாட்டோம்.” – என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne தெரிவித்தார். புத்தாண்டில் எதிரணியின் அரசியல் செயல்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ஆட்சியைக் கவிழ்க்க எம்மால் முடியாது. அதற்குரிய பணியை மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் ஆயுள் காலம் ஐந்து எனக் கூறப்பட்டாலும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை அதற்கு முன்னரே மக்கள் அனுப்பினார்கள். எனவே, அரசாங்கத்தின் ஆயுளென்பது மக்களின் கைகளிலேயே உள்ளது. […]

அரசியல் செய்தி

வெனிசுலாமீதான இராணுவ ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறது ஜே.வி.பி.!

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலாவுக்குள் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையை ஜே.வி.பி. (JVP) வன்மையாகக் கண்டித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக்கட்சியே ஜே.வி.பியாகும். வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் அக்கட்சியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு சார்ந்த இடையீட்டினை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். உலகின் எந்தவொரு சுதந்திரமான, தன்னாதிக்கமுடைய நாட்டினை போன்றே வெனிசுலாவிலும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்கின்ற இறைமைத் தத்துவம் […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு ஆபத்தெனில் ரணில் களத்துக்கு வருவார்: ஐதேக அறிவிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

“நாடு விழும்பட்சத்தில் சவாலை ஏற்று அதனை நிர்வகிகக்கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எனவே, நாட்டுக்கு ஆபத்தெனில் அவர் பொறுப்பைவிட்டு ஓடும் நபர் கிடையாது.” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, எதிரணி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகூறி ஆசிபெற்றனர். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சமன் ரத்ன பிரிய கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் முறையான முகாமைத்துவம் இல்லை எனவும், இவ்வாறு […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியும் வலியுறுத்து!

  • January 2, 2026
  • 0 Comments

“தமக்கு மக்கள் ஆதரவு உள்ளதெனக் கூறும் அரசாங்கம், முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டில் இந்த சவாலை விடுக்கின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தலை […]

அரசியல் இலங்கை செய்தி

6 ஆம் திகதி கூடுகிறது அதிஉயர் சபை: அவசரகால சட்டம், தெரிவுக்குழு பற்றி ஆராய்வு!

  • January 1, 2026
  • 0 Comments

புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன. அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு, அங்கீரிக்கப்படவுள்ளது. அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் பிரேரணை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பியின் நகரசபை தலைவர் ராஜினாமா! பின்னணியில் அரசியல் அழுத்தமா?

  • December 31, 2025
  • 0 Comments

மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமஆராச்சி தனது பதவியை இன்று (31) ராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியே மினுவாங்கொடை நகரசபையில் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் இன்று விசேட சபை அமர்வு இடம்பெற்றவேளையிலேயே பதவி விலகும் அறிவிப்பை நகர சபை தலைவர் விடுத்தார். மினுவாங்கொடை நகரசபை வரலாற்றில், தலைவரொருவர் பதவி விலகுவது இதுவே முதன்முறையாகும். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகுவதாகவும், தனக்கு அரசியல் ரீதியில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்று நகர சபை தலைவர் அசேல […]

அரசியல் இலங்கை செய்தி

மண்டியிட்டது கூட்டு எதிரணி: வென்று காட்டியது என்பிபி!

  • December 31, 2025
  • 0 Comments

அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (31) நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதீடுமீதான வாக்கெடுப்பின்போது ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 2 வாக்குகளால் பாதீடு நிறைவேறியது. தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் நாளை நடக்கப்போவது என்ன? அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

“கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாளை (31) நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நாளை (31) மீண்டும் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அமைச்சர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். “ கொழும்பு மாநகரசபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டம்தான் நாளை மீண்டும் முன்வைக்கப்படுகின்றது. வரவு- செலவுத் திட்டத்தில் ஏதேனும் […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சி கவிழுமா? பிரதி அமைச்சர் பதிலடி!

  • December 30, 2025
  • 0 Comments

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமே இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் திட்டவட்டமாக அறிவித்தார். அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டதாகவும், விரைவில் கவிழும் எனவும் எதிரணிகள் கருத்து வெளியிட்டுவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவரும்போது, இரு மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என சஜித் பிரேமதாச கூறினார். அதன் பின்னர் ஆறு […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. அரசாங்கம் குறித்து அபாய சங்கு ஊதுகிறார் சரத் வீரசேகர!

  • December 30, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு (NPP) மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறைவடைந்து வருகின்றது. கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை இதனை பிரதிலளிக்கின்றது. எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவில்லை. தேசிய […]

error: Content is protected !!