மகாநாயக்க தேரர்களை சந்தித்த கையோடு நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!
தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “ இப்பிரேரணைமூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மேலும் வாய்ப்பு கிட்டும்.” – என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு இன்று (08) விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள கல்வி விவகாரம் தொடர்பில் பிரதமர் […]







