காணி உரிமை வழங்கினால் மலையக மக்களின் தலையெழுத்து மாறும்!
“மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் Jeevan Thondaman தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ பெருந்தோட்ட நிறுவனங்களை நம்ப வேண்டாம் என நான் கூறினேன். அவர்களின் சூழ்ச்சி என்னவென்பது எமக்கு தெரியும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு , தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் […]




