இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை – மூன்று பேர் உயிரிழப்பு!
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சீரற்ற வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் இயற்கை பேரழிவுகளால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 144 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக பேராதனை, ருவன்வெல்ல மற்றும் தம்புத்தேகம ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுக்கைக்கு அருகில் […]