அரசியல் இலங்கை செய்தி

இலங்கையை கட்டியெழுப்ப அமெரிக்கா முழு ஆதரவு!

  • December 11, 2025
  • 0 Comments

“ இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகவே இருக்கின்றது.” இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அலிசன் ஹூக்கர் மேற்கண்டவாறு கூறினார். அனர்த்தத்தினால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தனது இரங்கலை அலிசன் ஹூக்கர் தெரிவித்தார். ” நெருக்கடியான நேரத்தில் பல்வேறு நிவாரண மற்றும் நிவாரணக் […]

அரசியல் இலங்கை செய்தி

அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் கொழும்பில் முத்தரப்பு சந்திப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றார். அதையடுத்து அவர்கள் இருவரும் கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்திற்குச் சென்றனர். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையினருடன் கலந்துரையாடியுள்ளனர். இதையடுத்து அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர் […]

அரசியல் இலங்கை செய்தி

ட்ரம்பின் விசேட செய்தியுடன் கொழும்பில் களமிறங்கும் அமெரிக்க ராஜதந்திரி!

  • December 11, 2025
  • 0 Comments

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இன்று இலங்கை வருகின்றார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வரும் உதவி இராஜாங்க செயலர் ஹூக்கர் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு […]

உலகம் செய்தி

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு – நம்பிக்கையை இழந்த ட்ரம்ப்

  • October 10, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கையை இழந்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார். பாகிஸ்தான் உட்பட பல நாடுகள், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளன. இந்நிலையில், தங்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுமா என ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், வேறு எந்தத் தலைவரும் செய்யாத அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அவர் […]

இலங்கை

விமானத்தில் சைவ உணவு மறுக்கப்பட்டதால் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்!

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, இலங்கை வந்த கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் உயிரிழந்த விடயம் தொடர்பில் குடும்பத்தினர் விமான நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர். கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் அவர் கோரிய சைவ உணவு (Vegetarian Meal) மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கு வேறு உணவு வழங்கப்பட்டுள்ளது. குறித்த உணவு தொண்டையில் சிக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மருத்துவரின் மகனான சூர்யா ஜயவீர கடந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு – சிறுவர்கள் பலி!

  • October 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் இரு சிறுவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 04 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான கெரியன் ரஷாத் ஜோன்ஸ் என்பவர் சந்தேகத்தின்பேரில் கைது  செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்பட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாக […]

error: Content is protected !!