அரசியல் இலங்கை

மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்!

  • November 13, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழ் மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ ஜே.வி.பியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கார்த்திகை வீரர்கள் தினம் இன்று (13) நினைவு கூறப்படுகின்றது. இடதுசாரி கொள்கையுடன் போராடிய வீரன் என்ற அடிப்படையில் நானும் அஞ்சலி செலுத்துகின்றேன். […]

அரசியல் இலங்கை

மக்கள்தான் எங்களுக்கு முக்கியம்: எதிரணிகள் ஆட முடியாது!

  • November 13, 2025
  • 0 Comments

ஊடகம்,பணம், அதிகாரம்,குடும்ப பின்னணி எதுவும் இல்லாத நிலையில் மக்களின் எதிர்பார்ப்புடனே ஆட்சியை பெற்றோம். மக்களுடன் தான் எமது பிணைப்பு உள்ளது. எமது முழு அரச செயற்பாடுகளும் மக்களின் பொறுப்கூறலை நிறைவேற்றும் வகையில் உள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ இந்நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ள […]

ஐரோப்பா

லிதுவேனியாக்குள் நுழைந்த மர்ம பலூன்களால் பரபரப்பு – விமான நிலையங்களுக்கு பூட்டு

  • October 25, 2025
  • 0 Comments

லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று லிதுவேனியா எல்லையை நேற்று கடந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனையடுத்து இரண்டு விமான நிலையங்களும் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்ட நிலையில், பெலாரஸ் எல்லை நாளை வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிதுவேனியா எல்லைக்குள் கடந்த வருடம் 966 ஹீலியம் பலூன்கள் நுழைந்த நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 500 பலூன்கள் பறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் கைதான யாழ் தம்பதி

  • October 14, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேபாள பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்மாண்டுவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் கைது […]

இலங்கை

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி – இலங்கை அழைத்து வர நடவடிக்கை

  • October 14, 2025
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் எனக் கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கடுமையாகும் சட்டம் – வாகன ஓட்டுநர்களுக்கு கடும் நடவடிக்கை

  • October 14, 2025
  • 0 Comments

ஜெர்மனியில், வாகனம் மற்றும் சைக்கிள் ஓட்டும் போது கையடக்க தொலைபேசிகள், டெப், மடிக்கணினிகள் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் ஓட்டுநர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கட்டுப்பாட்டு நடவடிக்கை எனப்படும் வாரத்தையை ஜெர்மன் காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, விதிகளை மீறும் நபர்களுக்கு 100 யூரோ அபராதம் விதிக்கப்படும். காவல்துறையின் தகவலுக்கமைய, ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது ஒருசில விநாடிகள் கையடக்க தொலைபேசி திரையில் கவனம் செலுத்தினாலும், அது சுமார் 14 மீட்டர் தூரம் கண்மூடித்தனமாக பயணத்தை […]

உலகம்

காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

  • October 14, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப் முன்வைத்த 20 அம்சங்களை உள்ளடக்கிய இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு, இஸ்ரேல் மற்றும் ஹாமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளன. அதற்கமைய, இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பிடம் பணய கைதிகளாக இருந்த அனைவரும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த அமைதி […]

உலகம்

சீனப் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – ஆயுட்காலம் உயர்வு

  • October 14, 2025
  • 0 Comments

சீனாவில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள், இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் வெளியான தரவுகளுக்கமைய, 2000ஆம் ஆண்டு ஒரு சீனப் பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 73.3 ஆண்டுகள் ஆக இருந்தது. அது தற்போது 80.9 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 25 ஆண்டுகளில் 7.6 ஆண்டுகள் அல்லது 10.4 சதவீதம் என்ற அளவில் ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. […]

ஐரோப்பா

உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியிடம் ஜெலென்ஸ்கி விடுத்த கோரிக்கை

  • October 12, 2025
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைதிக்கான மத்தியஸ்தராக செயல்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் செய்தது போல், உக்ரைனிலும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலில் ஜெலென்ஸ்கி இந்தக் கோரிக்கையை விடுத்ததாகக் கூறுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடிந்தால், அவர் நிச்சயமாக மற்ற போர்களை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி கூறினார். இதனிடையே, ரஷ்யா […]

உலகம்

அமெரிக்காவின் புதிய வரி அறிவிப்பு – பங்குச் சந்தையில் அதிர்வலை

  • October 12, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரி அறிவிப்பால், அங்குள்ள பங்குச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக முக்கிய குறியீடுகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. Nasdaq குறியீடு 3.5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது சமீபத்திய காலக்கட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகக் கருதப்படுகிறது. இதேபோல், S&P 500 குறியீடும் சுமார் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி, புதிய வரி நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தை எப்படி பாதிக்கும் என்ற அதிர்ச்சியை பிரதிபலிக்கின்றது. முதலீட்டாளர்கள், […]

error: Content is protected !!