இலங்கைக்காக களமிறங்கும் இந்தியா: ஜெய்சங்கரிடம் மோடி அனுப்பும் செய்தி என்ன?
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், இது விடயத்தில் இந்தியா முக்கிய வகிபாகத்தை வகிக்குமென தெரியவருகின்றது. தனது இலங்கை பயணத்தின்போது கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடனேயே எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பு வருகின்றார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு முதன் முதலில் இந்தியாவே நேசக்கரம் நீட்டியது. மீட்பு […]













