அரசியல் இலங்கை செய்தி

போர் சூழலில் தேசிய பாதுகாப்பு குறித்து சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும்: சஜித்!

  • March 7, 2026
  • 0 Comments

“உலகில் போர் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், ஒரு நாடாக நாம் நாடு குறித்தும், தேசிய பாதுகாப்பு குறித்தும் சிந்தித்து சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஒரு நாடாக, இன்று நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம். பல ஆபத்துகளும் சவால்களும் நம்மை நோக்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், […]

விளையாட்டு

இங்கிலாந்துக்கு, இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

  • March 5, 2026
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிராக முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (5) மோதுகின்றன. மும்பையில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், சிவம் டூபே 49 […]

உலகம்

ஈரான்மீதான போரில் ஆஸ்திரேலியா பங்கேற்கவில்லை!

  • March 2, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் தமது நாடு பங்கேற்கவில்லை என்று ஆஸ்திரேலியா Australia தெரிவித்துள்ளது. மேற்படி தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Penny Wong தெரிவித்தார். ஈரான் மக்களின் உரிமைகளைப் பறித்த அந்தத் தலைவரின் மறைவுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அனுதாபம் தெரிவிக்கப்போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதேவேளை, ஈரான்மீது ஆஸ்திரேலியா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஆஸ்திரேலியா

9 மாதங்களுக்குள்ளேயே தலைமைப் பதவியை இழந்த ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர்!

  • February 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் Liberal Party புதிய தலைவராக ஆங்கஸ் டெய்லர் Angus Taylor தெரிவு செய்யப்பட்டுள்ளார். இனி அவரே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், எதிரணி கூட்டணி தலைவராகவும் செயல்படுவார். கட்சியால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை ஏற்று, கட்சியை வெற்றிபாதை நோக்கி அழைத்து செல்வதற்கு தீவிரமாக செயல்படபோவதாக அவர் உறுதியளித்துள்ளார். தலைமைப் பதவிக்காக கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே Sussan Ley , அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். […]

இலங்கை செய்தி

கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு நிபந்தனையுடன் பிணை!

  • February 11, 2026
  • 0 Comments

திருகோணமலை- கடற்கரையில் கடல் பாதுகாப்பு சட்டத்தை மீறி சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்றம் (11) பிணை வழங்கியுள்ளது. இவ்வழக்கு நீதவான் நீதிமன்றில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து எதிராளிகளுக்கான பிணை கோரிக்கைக்கான மனு தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது இதனை அடுத்து 10 எதிராளிகளையும் பிணையில் விடுப்பதற்கான உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வழங்கினார். இதன்படி மீளவும் […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம்: ஐரோப்பிய குழுவிடம் தமிழரசுக் கட்சி கோரிக்கை!

  • February 11, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே தமிழரசுக் கட்சியினருடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். “ பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல் மற்றும் புது வரைபு, மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட வேறு பல விடயங்களை இதன்போது […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொலை: 12 பேருக்கு மரண தண்டனை!

  • February 11, 2026
  • 0 Comments

அரகலய என்றழைக்கப்படும் மக்கள் போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி Amarakeerthi Athukorala கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கே கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மேற்படி தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 41 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 37 பேர்தான் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்கள். மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருவர் […]

இலங்கை செய்தி

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!

  • February 11, 2026
  • 0 Comments

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் பிரதிநிதிகள் European External Action Service , பிரதமர் பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தினர். பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது. இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குவதாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார். இருதரப்புக்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்துவத்தை […]

இந்தியா

17 ஆம் திகதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

  • February 11, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் Emmanuel Macron மூன்று நாள் பயணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வருகின்றார். டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு AI உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா மற்றும் பிரான்சுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார். இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் […]

இலங்கை செய்தி

NPP அரசின் வேலைத்திட்டத்துக்கு போரா சமூகம் பாராட்டு!

  • February 10, 2026
  • 0 Comments

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப்புக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் , இலங்கையின் […]

error: Content is protected !!