ஐரோப்பா

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள கடையில் தீவிபத்து!

  • October 17, 2025
  • 0 Comments

லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்று மாலை தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஃபாரஸ்ட் ஹில்லில் (Forest Hill)  உள்ள பெர்ரி வேலில் (Perry Vale) தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 15 தீயணைப்பு வாகனங்களில் வருகை தந்த 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்டிடத்தின் தரைத்தளத்தில்  கடை உள்ளது, அதன் மேல் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று […]

ஐரோப்பா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மீண்டும் லண்டனில் ஒன்றுக்கூடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

  • October 11, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருந்தாலும் இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பேரணியாக செல்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டால் பிரித்தானியாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் 32 ஆவது ஆர்ப்பாட்டமாக இது இருக்கும் என்று பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சாரம் (PSC) தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த […]

ஐரோப்பா

இஸ்தான்புல்லில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட அவசர நிலை!

  • October 10, 2025
  • 0 Comments

இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர்பஸ் A320 விமானத்தில் நான்கு பயணிகள் சுகவீனம் அடைந்த  நிலையில்  அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 142 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த விமானமானது நேற்று மாலை புக்கரெஸ்ட் ஹென்றி கோண்டா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த வைத்திய குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த நால்வருக்கும் சிகிச்சையளித்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட புகையினை சுவாசித்ததன் காரணமாக அவர்கள் சுகவீனம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது […]

ஐரோப்பா

லண்டனில் 8000 சிறுவர்களின் தரவுகளை திருடிய இரு இளைஞர்கள் கைது!

  • October 8, 2025
  • 0 Comments

லண்டனில் உள்ள பாலர் பாடசாலை சங்கிலியில் சைபர் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணினியை தவறாக பயன்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் இருவரும் எதிர்நோக்கியுள்ளனர். ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் பிஷப்ஸ் ஸ்டோர்ட்ஃபோர்டில் (Bishop’s Stortford, Hertfordshire) உள்ள குடியிருப்புகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலர் பாடசாலையில் இருந்து சுமார் 8,000 […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

லண்டனில் இடம்பெறும் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளக் கூடாது – பிரித்தானிய பிரதமர்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று  நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார். மான்செஸ்டர் (Manchester) தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள்  அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், யூத சமூகங்களைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளான இன்று லண்டனைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டு அணிவகுப்பை நடத்த […]