உலகம்

நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது

  • March 28, 2026
  • 0 Comments

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி (KP Sharma Oli ) இன்று (28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இடம்பெற்ற ‘Gen Z’ இளைஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

error: Content is protected !!