விளையாட்டு

பதிலடி கொடுக்குமா இலங்கை?

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T – 20 கிரிக்கெட் போட்டி இன்று (30) நடைபெறுகின்றது. கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் Pallegala International Cricket Stadium இலங்கை நேரப்படி இன்றிரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இதற்கு முன் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் ODI கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. அந்த வெற்றியின் ஊக்கத்துடன் இங்கிலாந்து அணி டி20 தொடரிலும் முன்னிலை பெறும் […]

இலங்கை

கண்டி மாவட்டத்தில் 35 மாணவர்கள் பலி!

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் கண்டி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 35 மாணவர்களும், 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. அத்துடன், கண்டி மாவட்டத்தில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் மொத்தமாக 232 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர். ஆயிரத்து 800 வீடுகள் முழுமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. பேரிடரால் கண்டி மாவட்டத்தில் 51 […]

இலங்கை

கண்டி மாவட்டத்தில் 1,881 வீடுகள் சேதம்!

  • December 6, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 232 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர். வெள்ளம், மண்சரிவால் ஆயிரத்து 800 வீடுகள் முழமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 8 ஆயிரத்து 992 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 670 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!