வேலையை விட்டு வெளியேறத் தயாராகும் 2.7 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள்
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் 2.7 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வேலையை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அலையன்ஸ் ஆஸ்திரேலியா (Allianz Australia) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 80 சதவீத ஊழியர்களும் 66 சதவீத மேலாளர்களும் தங்கள் நிறுவனங்கள் நல்ல பணியிட நடைமுறைகளை செயல்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளனர். 78 சதவீத மேலாளர்கள் நேரம் மற்றும் வளங்களின் பற்றாக்குறை, பொருத்தமான தொழில்நுட்பம் இல்லாதது மற்றும் உள் மோதல்கள் இதற்கு முக்கிய காரணங்கள் என்று கூறுகின்றனர். […]