ஈக்வாடோரில் ( Ecuador) எரிபொருள் விலை உயர்வு – வீதிக்கு இறங்கிய மக்கள்!
ஈக்வாடோரில் ( Ecuador) எரிபொருள் விலையை எதிர்த்து நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். தலைநகர் கியூட்டோவில் (Quito) ஒன்றுக்கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் இந்நடவடிக்கைக்கு எதிராக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப் பிரயோகித்ததுடன், தடியடியும் நடத்தியுள்ளதாக ஏபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டின் ஜனாதிபதியான டேனியல் நோபோவாவை (Daniel Noboa) எதிர்த்தும் குரல் எழுப்பியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருள் மானியம் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், டீசல் விலையானது கேலனுக்கு $1.80 இலிருந்து […]