உலகம்

காசாவுக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட தயாராகும் ட்ரம்ப்

  • October 9, 2025
  • 0 Comments

காசாவுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா சமாதானத்திற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். காசாவுக்கான விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்த நாடாக செயற்படும் எகிப்திற்கு, டொனால்ட் ட்ரம்ப் முதலில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, ட்ரம்ப் […]

உலகம்

கடவுளின் உதவியுடன் பணயக்கைதிகளை அழைத்து வருவோம் – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை

  • October 9, 2025
  • 0 Comments

கடவுளின் உதவியுடன் காசாவில் சிக்கியுள்ள பணய கைதிகளை அழைத்து வருவோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினால் பிடிக்கப்பட்ட பணய கைதிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்த தகவலை இஸ்ரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சமாதான ஒப்பந்தத்தை அங்கீகரிக்க நாளை தனது அமைச்சரவையைக் கூட்டுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எட்டப்பட்ட ஒப்பந்தத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகளை திரும்பப் […]

உலகம்

முடிவுக்கு வரும் காசா போர்! ட்ரம்பின் திட்டத்தில் கையொப்பமிட்ட ஹமாஸ் – இஸ்ரேல்

  • October 9, 2025
  • 0 Comments

காசாவில் இரண்டு வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான உடன்படிக்கையின் கீழ் சாத்தியமாகியுள்ளது. இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எகிப்தில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், ஈரான், ஏமன் மற்றும் லெபனான் போன்ற நாடுகளை […]

உலகம்

அமெரிக்க விமான நிலையங்களில் உச்சக்கட்ட நெருக்கடி நிலை – 6,000 விமானங்கள் தாமதம்

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கத்தால் பல நாடுகளுக்கு செல்லும் 6,000 க்கும் மேற்பட்ட விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு தாமதமாகி உள்ளன. மேலும் சில விமான நிலையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டென்வரைச் சுற்றியுள்ள முக்கிய விமான நிலையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டன. லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹொலிவுட் பர்பேங்க் விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வசதி ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திங்கள்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

குடிநுழைவு விதிகளை கடுமையாக்கிய ட்ரம்ப்! விசா பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்கா வழங்கும் மாணவர் விசாக்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒகஸ்டில் மாணவர் விசா அளவுகள் சுமார் 20 சதவீதம் குறைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வீழ்ச்சிக்கு டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடிநுழைவு விதிகளே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்கள் நேர்காணலுக்காக பதிவு செய்ய வேண்டிய புதிய நடவடிக்கைகள், சமூக ஊடக கணக்குகளை சரிபார்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விசா கிடைப்பதை சிக்கலாக்கியுள்ளன. கடந்தாண்டில் […]