கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி – 10 பேர் முறைப்பாடு!
கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (09) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (10) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சிங்கராஜே ஜனக சில்வா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கனடாவின் நிரந்தர வதிவிடக் குடியுரிமையையும் பெற்றுள்ளார். சந்தேக நபர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ளார். […]