ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் பலர் பலி
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு மேஜரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தாலிபான் அல்லது தையிப்-இ-தாலிபான் அமைப்புக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தான் இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் […]