பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளுக்கும் இடையில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடைபெறுகின்றது. இரு அணிகளுக்கும் இடையில் 5 டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.




