இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் 410 வைத்தியசாலைகள் பாதிப்பு
டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் இலங்கையில் 410 வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகபட்ச சேதங்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக 500க்கும் மேற்பட்ட சுகாதார நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்களை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர மேலும் கால அவகாசம் எடுக்கும் எனக் கூறியுள்ளார். […]




