குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் பலி: மலையகத்தில் தொடரும் சோகம்!
குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். நுவரெலியா மாவட்டம் Nuwara Eliya , நானுஓயா Nanu Oya கிரிமிட்டி பகுதியிலேயே இன்று (12) இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக் கூட்டை கழுகு தாக்கிய நிலையில், கலைந்து வந்த குளவிகள் குறித்த பெண்ணை தாக்கியுள்ளன. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 78 வயதான நடராஜா லெட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.




