அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் நாளை “அரசியல் சமர்”! மண்கவ்வுமா “மனசாட்சி”?

  • December 30, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (NPP) நாளை (31) முக்கியமானதொரு அரசியல் சமருக்கு முகம்கொடுக்கின்றது. கூட்டு எதிரணியின் வியூகத்தை தோற்கடித்து இச்சமரில் வெல்வதற்கு தேசிய மக்கள் சக்தி தீவிரமாக செயல்பட்டுவருகின்றது. மறுபுறத்தில் கூட்டு வியூகத்தை தக்கவைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJP) போராடிவருகின்றது. இலங்கையில் உள்ள உள்ளாட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபையென்பது (CMC) மிக முக்கியத்துவம்மிக்க சபையாகக் கருதப்படுகின்றது. எனவேதான், அச்சபையின் வரவு- செலவுத்திட்டம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கின்றது. கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) 2026 ஆம் […]

அரசியல் இலங்கை செய்தி

எதிரணி ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது!

  • December 29, 2025
  • 0 Comments

ஊடக நிறுவனங்கள்மீது தாக்குதல் நடத்தி அவற்றை கொளுத்தியவர்கள், இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது “சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடக அடக்குமுறையைக் கையாள்வதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு. “ கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். […]

அரசியல் இலங்கை செய்தி

ஊடகங்கள்மீது கை வைத்தால் என்.பி.பி. அரசாங்கத்தின் கதை முடியும்!

  • December 29, 2025
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைக்க முற்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணாமல்போக நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJP) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S.M. Marikar) எச்சரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஊடக நிறுவனங்கள் தவறிழைத்தால் , தவறான செய்திகளை வெளியிட்டால் அதற்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஊடகத்துறை அமைச்சில் முறைப்பாடும் […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா ரணில்? அவரின் திட்டம் என்ன?

  • December 27, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வரமாட்டார் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் நெருக்கத்துக்குரிய அரசியல் சகாக்களில் ஒருவராக ராஜித சேனாரத்ன விளங்குகின்றார். சஜித் தரப்புடன் பயணித்த அவர் தற்போது மீண்டும் ரணில் பக்கம் தாவியுள்ளார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன கூறியவை வருமாறு, “ நாடாளுமன்றம் […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபையில் 31 ஆம் திகதி பலப்பரீட்சை!

  • December 26, 2025
  • 0 Comments

கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் (budget) எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

மனசாட்சி பற்றி பேசும் என்.பி.பி. பிள்ளையான் தரப்பின் ஆதரவை எந்த அடிப்படையில் பெற்றது?

  • December 25, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியினர் NPP மனசாட்சி பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் Mujibur Rahma தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையில் உள்ள உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்பட வேண்டும் என மாநகர மேயர் கோரிக்கை விடுத்திருந்தார். கொழும்பு மாநகரசபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்ட பின்னரே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கூறியவை வருமாறு, “புதியதொரு அரசியல் […]

இலங்கை

ரன்வல விபத்தில் கடமை தவறிய பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

  • December 18, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகன விபத்து தொடர்பான சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் விசாரணை ஒன்று நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விசாரணையில், சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன – ஜனாதிபதி தெரிவிப்பு

  • November 7, 2025
  • 0 Comments

இலங்கை தொடர்பில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. அதனால்தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தனியார் சொத்துகள் சூறையாடப்படும் என்ற மாயை உருவாக்கப்பட்டது. ஆனால் அது போலி என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. சிறந்த முதலீடுகளைப் பெறுவதற்குரிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் […]

error: Content is protected !!