சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை?
“சட்டமா அதிபரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார Harshana Nanayakkara தெரிவித்தார். சட்டமா அதிபருக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் இடம்பெற்றது. அதேபோல அவருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் சிலர் களமிறங்கி இருந்தனர். இந்நிலையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “சட்டமா அதிபரை பாதுகாக்க வேண்டும் என ஒரு சாராரும், அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மற்றுமொரு சாராரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர். சட்டமா அதிபரை பாதுகாக்கும் […]




