கொழும்பிலிருந்து தாயம் திரும்புகிறார் அமெரிக்க தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chung, எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சிகாலத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட அவர், இலங்கையில் நான்கு ஆண்டுகள் சேவையாற்றினார். ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள 39 இராஜதந்திரிகள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கொழும்பிலிருந்து வாஷிங்டன் செல்கின்றார். ஜுலி சங், இலங்கை அரசியல் களத்தில் எப்போதும் பேசுபொருளாக இருந்த […]




