சுகாதாரத்துறை ஸ்தம்பிக்கும் சாத்தியம்: வைத்தியர்கள் போராட்டத்தில் குதிப்பு!
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் நாளை (23) காலை 8 மணி முதல் 48 மணிநேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் GMOA அறிவித்துள்ளது. இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், சிறார் வைத்தியசாலைகள், புற்றுநோயாளர் வைத்தியசாலைகளில் இப்போராட்டம் இடம்பெறாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.




