அரசியல் இலங்கை செய்தி

மஹிந்தவின் சகா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது: பின்னணி என்ன?

  • January 5, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ Johnston Fernando இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் FCID அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று எப்.சி.ஐ.டிக்கு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வரவழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு லொறி உள்ளிட்ட வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜொன்ஸ்டர் […]

அரசியல் இலங்கை செய்தி

முழு குடும்பத்தையும் சிறையில் அடைக்க முயற்சி: FCID யில் ஆஜர் ஆக முன் ஜொன்ஸ்டன் கதறல்!

  • January 5, 2026
  • 0 Comments

“ நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது குடும்பத்தை சிறை வைப்பதற்குரிய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே இது.” – என்று முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ Johnston Fernando தெரிவித்தார். எப்.பி.ஐ.டி FCID எனப்படும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) முன்னிலையாவதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “வாக்குமூலம் பெறுவதற்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே சிஐடி வந்தேன். நேற்றுதான் அறிவித்தல் கிடைக்கப்பெற்று வந்தது. இதற்கு முன்னர் அறிவித்தல் […]

அரசியல் இலங்கை செய்தி

ஆங்கில பாடபுத்தகத்தில் முறையற்ற குறிப்பு: பின்னணியில் ராஜபக்சக்களா?

  • January 2, 2026
  • 0 Comments

“தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்த விடயம் எவ்வாறு நடந்தது என்பது பற்றி விசாரணை அவசியம். கல்வி அமைச்சின் செயலாளர் சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த புத்தகத்தை எதிரணியா அச்சிட்டது? சிலவேளை, ராஜபக்சக்கள்தான் […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளசுக்கு வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள் குறித்து தீவிர விசாரணை!

  • December 31, 2025
  • 0 Comments

“முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa. தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதன்போது டக்ளஸ் தேவானந்தா கைது கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவாலேயே […]

இலங்கை செய்தி

கஞ்சாவுடன் சிக்கிய அரசியல்வாதி: யாழில் பரபரப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று (30) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் வைத்து அவர் சிக்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்போது பிரதேச […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸிடம் விசாரணை வேட்டை தீவிரம்! தடுப்பு காவல் உத்தரவு பெற திட்டம்!!

  • December 27, 2025
  • 0 Comments

குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்குரிய தடுப்பு காவல் உத்தரவை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலை விசாரணைப் பிரிவினரால் டக்ளஸ் தேவானந்தா நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்தார். இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்பூர்வமாக பிஸ்டல் ரக துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதாள குழு […]

error: Content is protected !!