இலங்கை செய்தி

ஒரு நாடாக மீண்டெழுவோம்: தைத் திருநாளில் ஜனாதிபதி அழைப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

” எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். ஒரு தேசமாக மீண்டெழுவதற்கு ஒன்றிணைவோம்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி வருமாறு, உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. […]

இலங்கை செய்தி

புதிய கல்வி மறுசீரமைப்பின் அவசியத்துவம் ஏற்பு!

  • January 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினார்கள். புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக அவர்கள் கூறியுள்ளனர். தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய […]

இலங்கை செய்தி

16 ஆம் திகதி விடைபெறும் அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chang , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை Anura Kumara Dissanayake சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி கொழும்பில் இருந்து வெளியேறுகின்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங். இந்நிலையில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இதன்போது, ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை செய்தி

உயிரைத்தவிர இழந்த ஏனைய அனைத்தையும் வழங்குவோம்: ஜனாதிபதி!

  • January 9, 2026
  • 0 Comments

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். அதற்கான வலுவான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த மக்களை 2048 வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். டித்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டில் 55 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • January 9, 2026
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார். “அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும். வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 31 ஆயிரம் வீடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் வீடுகள் வரை நிர்மாணிக்கப்படும்.” எனவும் ஜனாதிபதி கூறினார். டித்வா […]

இந்தியா

இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

  • January 9, 2026
  • 0 Comments

பிரான்ஸ் French ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் Emmanuel Macron அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் S Jaishankar, பிரான்ஸ் ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது தமது இந்திய விஜயத்தை பிரான்ஸ் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸில் கடந்த வருடம் சர்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு AI உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்றிருந்தார். இம்மாநாட்டின்போது தான் இந்தியா வருவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 9 ஆம் திகதி முதல் இழப்பீடு!

  • January 7, 2026
  • 0 Comments

“அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை […]

இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் இன்று (05) மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடதுசாரி அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். வெனிசுலா இறையாண்மைமிக்க சுதந்திர நாடெனவும், அதன்மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி கைது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். போரை உருவாக்கி, எண்ணைவளத்தை கொள்ளையடிக்க முற்படுகின்றனர் எனவும் […]

அரசியல் இலங்கை செய்தி

“முதலில் ஜனாதிபதி பதவி விலகட்டும்” – நாமல் சர்ச்சை கருத்து

  • January 5, 2026
  • 0 Comments

“ முதலில் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள், பிறகு ஆட்சியை பொறுப்பேற்பது பற்றி கதைக்கலாம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எம்.பி. தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு விசேட ஆன்மீக வழிபாடு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது அவரிடம் “ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவி விலகினால் நாட்டை பொறுப்பேற்க நாமல் ராஜபக்ச தயார்.” […]

இலங்கை செய்தி

மீள்குடியேற்ற ஏற்பாடு குறித்து கேட்டறிந்தார் அநுர!

  • January 1, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல் சென்று மக்களிடம் நலன் விசாரித்தார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, அங்கும்புர, கன்கொட்டுவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 06 வீடுகள் முழுமையாகவும், 15 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. அதிக ஆபத்துள்ள வலயமாக அடையாளம் காணப்பட்ட அந்தப் பகுதியில் 30 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்படி, கடந்த நவம்பர் 28 ஆம் திகதி ஸ்ரீ சுதர்ஷனாராமய […]

error: Content is protected !!