ஹமாஸ் இயக்கத்தை தடை செய்யும் சுவிஸ் அரசாங்கம்
ஹமாஸ் இயக்கத்தை தடை செய்த இயக்கமாக அறிவிப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
.மத்திய கிழக்கில் நிலவிவரம் நிலைமைகளுக்கு பதில் அளிக்கும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தை தடை செய்வது குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.
“இந்தச் சட்டம், சுவிட்சர்லாந்தில் உள்ள எந்தவொரு ஹமாஸ் நடவடிக்கைகளையும் அல்லது அமைப்புக்கான ஆதரவையும் எதிர்கொள்ள தேவையான கருவிகளை கூட்டாட்சி அதிகாரிகளுக்கு வழங்கும்.”
அக்டோபர் 7 ஆம் திகதி , 2007 ஆம் ஆண்டு முதல் ஹமாஸால் நடத்தப்படும் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியப் போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர், இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்,
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில், இஸ்ரேலும் ஹமாஸும் காசாவில் நான்கு நாள் போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேலியக் காவலில் உள்ள பாலஸ்தீனியக் கைதிகளுக்காக அடைக்கப்பட்டிருந்த 50 சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கான கத்தார்-மத்தியஸ்த உடன்படிக்கைக்கு உடன்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.