விளையாட்டு

T20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ரோகித் ஷர்மா! – அதிர்ச்சியில் ரசிகர்கள்

T20கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரோகித் ஷர்மா நிரந்தரமாக விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் ஷர்மா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர்களில் ஒருவர். இந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய தோல்வி அடைந்திருந்தாலும், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடச் செய்தவர் இவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய கோப்பையை தோனிக்கு பிறகு 2வது முறையாக ரோகித் ஷர்மா கைப்பற்றி கொடுத்துள்ளார். எம்.எஸ்.தோனி 2010 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்று கொடுத்த நிலையில் ரோகித் சர்மா 2018 மற்றும் 2023ம் ஆண்டுகளில் டிராபியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து நடந்த முக்கியமான தொடரான உலகக் கோப்பை 2023 தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த நியூசிலாந்திற்கு எதிரான அரை இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Rohit Sharma unlikely to play T20Is in near future - Breaking News | Daily  Mirror

இந்நிலையில் தான் இந்த உலகக் கோப்பை 2023 தொடருடன் ரோகித் ஷர்மா T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் ஷர்மா விளையாடிய 148 ஒரு நாள் போட்டிகளில் 3853 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 சதமும், 29 அரைசதங்களும் அடங்கும். ஹிட்மேன், சிக்ஸர் மன்னன் என்று அழைக்கப்படும் ரோகித் அதிரடிக்கு பெயர் போனவர். அவர், டி20 கிரிக்கெட்டில் இல்லையென்றால், அந்த கிரிக்கெட்டை பார்ப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கும் ரசிகர்கள் ஏராளாம்.

T20 மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியாக ஆடக் கூடிய ரோகித் ஷர்மா களத்தில் இருக்கும் வரையில் பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லலாம். ஆனால், அவர் T20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக வெளியாகும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மட்டுமின்றி, விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், T20 கிரிக்கெட்டில் தங்களின் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு பிசிசிஐ முழு சுதந்திரம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 36 வயதாகும் ரோகித் ஷர்மா, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. எனினும், இதுதொடர்பாக அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content