அம்மா நடிகையை திருமணம் செய்த மகன்… நிஜத்தில் நடந்த சம்பவம்

சின்னத்திரை சீரியலில் நடித்த நடிகையும் நடிகரும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த சீரியலில் தனக்கு அம்மாவாக நடித்த நடிகையை காதலித்து கரம் பிடித்து இருக்கிறார் பிரபல நடிகர்.
அந்த நடிகரின் பெயர் சுயாஷ் ராய். இவர் பியார் ki என்ற இந்தி தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஸ்டார் ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.
இதில் தனக்கு அம்மாவாக நடித்த கிஷ்வர் மெர்சன்ட் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார் சுயாஷ் ராய்.
இந்த தொடரில் கிஷ்வர் மெர்சன்ட் காட்டேரியாக நடித்து இருந்தார். அவரின் வளர்ப்பு மகனாக சுயாஷ் ராய் நடித்திருந்தார்.
சுயாஷ் ராயும், கிஷ்வர் மெர்சன்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சீரியலில் அம்மா மகனாக நடித்த இருவர் திருமணம் செய்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.
இவர்களின் காதலுக்கு முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்கள் இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி திருமணம் செய்து வைத்தனர். சுயாஷ் ராயை விட கிஷ்வர் மெர்சன்ட் 8 வயது மூத்தவர் ஆவார்.
காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. சுயாஷ் ராய், கிஷ்வர் இருவருமே வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள்.
சுயாஷ் ராய் இந்து மதத்தை சேர்ந்தவர். அவரின் மனைவி கிஷ்வர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். குடும்பத்தினர் சம்மதத்துடனே இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் குறையாத காதலுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறது.