விஜய் – சிவகார்த்திகேயனுடன் மோதுவாரா சூர்யா?

ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கருப்பு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் படக்குழுவால் தீபாவளுக்கி வெளியிட முடியவில்லை.
திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அன்று விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாக இருப்பதால். படக்குழு பொங்கலுக்கும் வெளியிடாது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் பொங்கல் ரிலீஸில் விஜய், சிவகார்த்திகேயனுடன் சூர்யாவும் மோதுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.