பொழுதுபோக்கு

தங்கலான் படத்துக்கு வெற்றி நிச்சயம் – சொன்னது எந்த டாப் நடிகர் தெரியுமா?

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து நாளை ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் தங்கலான். இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாளை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இப்படம் கண்டிப்பாக ஆஸ்கார் பெரும் என்ற உறுதியில் படக்குழுவினர் உள்ளனர்.

மேலும், புரோமோசனுக்காக மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரிக்கும், வெளி மாநிலங்களில் உள்ள மெட்ரோ நகரங்களுக்கும் சென்று அங்கு ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

இவ்வாறு விறுவிறுப்பாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்திற்காக விக்ரம் தன் முழு உழைப்பையும் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தங்கலான் படத்தை பாராட்டி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த படத்தின் வெற்றி மிக பெரிதாக அமையும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் உள்ள படத்தின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content