பொழுதுபோக்கு

ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க மறுத்தாரா சூர்யா.. மனதை மாற்றியது யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்தில் அனைவரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் சூர்யாவின் நடிப்பு திரையுலகினரால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் முதலில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா மறுத்துள்ளார்.

முதலில் லோகேஷ் கனகராஜ் சூர்யாவிடம் ரோலக்ஸ் கேரக்டர் பற்றி கூறும் போது சூர்யா அதில் நடிக்க தயங்கினாராம். பின்னர் கமல் தான் அந்த கேரக்டரில் சூர்யா நடிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினாராம். அதன்பின்னரே அந்த கேரக்டரில் நடிக்க சூர்யா ஓ.கே சொன்னாராம்.

சூர்யாவே இதுகுறித்து ஒருமுறை பேசி இருந்தார். அப்போது பேசிய அவர் “ இன்று நான் என்னவாக இருந்தாலும், வாழ்க்கையில் என்ன செய்தாலும் சரி,. கமல் சார் எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் போன் செய்து ஒரு வாய்ப்பு இருப்பதாகச் சொன்னபோது, ​​நான் அந்த வாய்ப்பை கைவிட விரும்பவில்லை.

நான் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. நீங்கள் எப்போது பயப்படுகிறீர்களோ, அப்போது நீங்கள் அதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று அர்த்தம். இது கடைசி நிமிட முடிவு. நான் லோகேஷ்க்கு போன் செய்து ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்கவில்லை என்று சொல்ல நினைத்தேன்.. ஆனால் நான் அதை ஒரு மனிதனுக்காக செய்தேன்.” என்று தெரிவித்தார்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content