கோபமடைந்த செய்தியாளர் – பகிரங்க மன்னிப்பு கோரினார் சூர்யா… நடந்தது என்ன?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கங்குவா.’ நாளை வெளியாக உள்ளது.
இதற்காக கங்குவா படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற கங்குவா திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா தாமதமாக வந்துள்ளார்.
பட நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் கோபமுற்ற செய்தியாளர் ஒருவர், நடிகர் சூர்யாவிடம் எவ்வளவு நேரம் காத்திருப்பது என்ற தொனியில் கேள்விகளை அடுக்கினார். செய்தியாளரின் இந்த செயல் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
தாமதமாக வந்ததை அடுத்து கேள்வியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு நடிகர் சூர்யா மிகவும் பொறுமயாக பதில் அளித்தார். அதன்பிறகு மேடையில் பேசத் தொடங்கிய நடிகர் சூர்யா தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரினார்.
(Visited 22 times, 1 visits today)