பொழுதுபோக்கு

சூர்யாவை இறுதியாக விக்ரம் படத்தில் பார்த்தது… ஏங்கும் ரசிகர்களுக்கு இதோ குட் நியுஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

5 நிமிடங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து உறையடும்போடு எல்லாம் தவிர்க்க முடியாத கதாபாத்திரமாக அது அமைந்தது.

இவரது படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இவரது நடிப்பில் பிரமாண்டமான பொருட்செலவில் கங்குவா படம் உருவாகி வருகின்றது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படம் சூர்யாவின் 42வது படமாகும்.

இவர் தனது 43வது படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், வரும் ஜூலை 23ம் தேதி நடிகர் சூர்யா தன்னுடைய 49 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் சூர்யா 44 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஜூலை 23ம் தேதி வெளியிட உள்ளது படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

இது மட்டும் இல்லாமல் கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோவும் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content