பொழுதுபோக்கு

சூர்யா 44 படத்துக்கு “சிறை” கன்ஃபார்ம்? குட் நியுஸ்

தமிழில் மட்டும் கவனம் செலுத்திவந்த சூர்யா இப்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.

அந்த ஹிந்தி படத்துக்காகத்தான் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

அதேசமயம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இது சூர்யாவுக்கு 44ஆவது படம் ஆகும்.

இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது.

படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்துக்கு சிறை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content