கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் ‘சூர்யா 44’ திரைப்படத்தின் அப்டேட்
நடிகர் சூர்யா நடிக்கும், 44-ஆவது படத்தின் டைட்டில் டீசர் வரும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கங்குவா’. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கடந்த இரண்டு வருடமாக நடித்து வந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், யாரும் எதிர்ப்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது சூர்யாவின் 44-ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா தன்னுடைய 44 வது படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் உள்ளிட்ட பல இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், சூர்யா மிகவும் இளமையான லுக்கில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சூர்யா கேங் ஸ்டாராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம், ஜோஜோ ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித், பிரேம்குமார், உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கேமியோ ரோலில் ஸ்ரேயா சரண் நடிக்கிறார். மேலும் இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் 2d என்டர்டைன்மெண்ட் நிறுவனங்கள் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் டீசர் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி, வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.