பொழுதுபோக்கு

நடிகருக்காக போதை பொருள் கடத்திய நடிகை.. அதிரடி காட்டிய போலீசார்

தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அடுத்த கோகா பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லாவண்யா என்கிற அன்விதா ( வயது 33). இவர் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் லாவண்யா கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக மடப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் லாவண்யாவை கண்காணித்து வந்தனர். அப்போது லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நர்சிங் போலீசார் இணைந்து லாவண்யாவின் வீட்டில் சோதனை நடத்தினர்.

அவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த எம்.டி.எம்.ஏ எனப்படும் 4 கிராம் எடையுள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

அதே குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் ஒருவருடன் லாவண்யாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. அந்த நடிகருக்காக லாவண்யா கோவாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

லாவண்யாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த ஒருவர் அவரது காதலியுடன் தலைமறைவாகி உள்ளார். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்