பொழுதுபோக்கு

ஒரு வழியா திருமணம் முடிஞ்சிது… TRB-யில் மீண்டும் எகிறியது கயல்…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத்தள்ளி, கயல் தொடர் முதலிடம் பிடித்துள்ளது. சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் அதிக புள்ளிகளைப் பெற்று கயல் முதலிடம் வகிக்கிறது.

கடந்த மாதத்தில் கயல் தொடரை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடம் பிடித்திருந்தது.

சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.

சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலிலும் சன் தொலைக்காட்சியின் தொடர்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இதன் மூலம் அதிக மக்கள் பார்வையிடும் தொடர்களாக கயல், எதிர்நீச்சல், வானத்தைப்போல, இனியா, மிஸ்டர் மனைவி போன்ற சன் தொலைக்காட்சி தொடர்களே உள்ளன.

அதிலும் குறிப்பாக கயல், எதிர்நீச்சல் தொடர்களிடையே டிஆர்பி பட்டியல் முதலிடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

பல மாதங்களாக முதலிடத்தில் இருந்த கயல் தொடரை, பின்னுக்குத்தள்ளி கடந்த மாதம் எதிர்நீச்சல் தொடர் முதலிடம் பிடித்தது. எனினும் இந்த வார டிஆர்பி பட்டியலில் கயல் தொடர் 12.48 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

எதிர்நீச்சல் தொடர் 11.55 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 10.09 புள்ளிகளுடன் சுந்தரி தொடரும், 10.05 புள்ளிகளுடன் வானத்தைப் போல தொடரும் உள்ளன. 9.78 டிஆர்பி புள்ளிகளுடன் இனியா தொடர் 5வது இடத்தில் உள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content