தமிழ்நாடு பொழுதுபோக்கு

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகரும், இயக்குநருமான சுந்தர் சி, மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியிலேயே இவர் களமிறங்குகின்றார்.

இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் ஆகியவை பாஜக சார்பில் எதிர்வரும் திங்கள் கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

அறிவிப்பு வெளியானதும் முறைப்படி வேட்பாளரை அறிமுகப்படுத்த உள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!