Shampooவில் ஆபத்து – கைவிடும் இளைஞர்கள்
உலகளவில் இளைஞர்கள் shampooவை கைவிடும்படி கூறும் காணொளிகள் Tiktokஇல் பிரபலம் அடைந்துள்ளன.
Shampooவில் உள்ள ரசாயனங்கள் தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெயை அகற்றுவதாகக் காணொளிகளில் கூறப்படுகிறது.
Shampooவுக்குப் பதிலாகத் தண்ணீரையோ மாற்று வழிகளையோ பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பாக இளம் ஆண்கள் சிலர் shampooவைக் கைவிடும் நிலையில் உள்ளனர். அவர்கள் தங்களுடைய அனுபவத்தையும் Tiktokஇல் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
வெறும் தண்ணீரை வைத்துத் தலைமுடியைச் சுத்தம் செய்யச் சிறிது காலம் எடுக்கும். தலைமுடி அதற்குப் பழகிக்கொள்ளவேண்டும் என்று சிலர் கூறினர். Shampooவுக்குப் பதிலாக apple cider vinegar, baking soda போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் சிலர் தெரிவித்தனர்.
Shampooவைக் கைவிட்டவுடன் தலைமுடி ஆரோக்கியமாகியுள்ளதாக அவர்கள் கூறினர். சிலரோ தலைமுடியில் பொடுகு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.
தலைமுடியில் உள்ள அழுக்கையும் வியர்வையையும் அகற்றுவதற்குத் தண்ணீர் மட்டும் போதாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். Shampooவைப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.