சூடான் உள்நாட்டு போர் : மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில்!
சூடானில் ஆயிரம் நாட்கள் நீடித்த போர், மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் ஆழ்த்தியுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
சூடானின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதமானோருக்கு உதவி தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 30 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவியை நம்பியுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
சூடானில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) மற்றும் சூடான் ஆயுதப் படைகளுக்கும் (SAF) இடையில் இடம்மெபற்ற போர் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாக அழித்துள்ளது.





