இலங்கை

முதுகெலும்பிருந்தால் கையொப்பம் இடுங்கள் – நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சஜித் கருத்து!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்க எதிராக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20.07) கையெழுத்திட்டுள்ளார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல், இதன்காரணமாக கடந்தகாலங்களில் மக்கள் உயிரிழந்துள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்டுள்ளது.

மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஞ்சித் மத்துமபண்டார, லக்ஸ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு  நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

அதேபோன்று, ஒரு நாட்டின் ஆரோக்கியமே மக்களின் வாழ்க்கை என்றும், சுகாதார சீர்கேடு மக்களின் வாழ்க்கை சீரழிவதற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!